தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் கவின். இவர் லிஃப்ட் படத்தின் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது. அதனைத்தொடர்ந்து டாடா, ஸ்டார், பிளடி பெக்கர் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்.
இதனையடுத்து தற்போது நடன இயக்குநர் சதீஷ் இயக்கத்தில் ‘கிஸ்’ படத்தில் நடித்துள்ளார். இதில் கவின் உடன் ப்ரீத்தி அஸ்ரானி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜென் மார்டின் இசையமைத்துள்ள இப்படத்திற்க்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் தயாரித்துள்ளார்.
இந்நிலையில் இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது . மேலும் இப்படம் மே மாதம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.







