நான் எடுத்த திரைப்படங்களில் இந்த படத்திற்கு தான் இசைவெளியீட்டு விழா நடக்கிறது என விருமன் இசைவெளியீட்டு விழாவில் இயக்குநர் முத்தையா தெரிவித்தார்.
கார்த்தி, அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. அதில் நடிகர் கார்த்தி, சூர்யா, கருணாஸ், சூரி, இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் முத்தையா, நான் எடுத்த படத்திற்கு இதுவரை இசை வெளியீட்டு விழா நடந்ததில்லை. நாம் வெற்றி பெரும் போது அப்பா அம்மாவை அழைத்து சென்று அவர்களுக்கு ஒரு அடையாளத்தை கொடுக்கலாம் என்று நினைத்தேன் அது இதுவரை நடக்கவில்லை என்ற வருத்தம் இருந்தது. நான் பிறந்த ஊரில் இந்த நிகழ்ச்சி நடப்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
இயக்குனர் பாரதிராஜாவை பார்த்து தான் நான் சினிமா எடுக்க வந்தேன். சூர்யாவுக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. எத்தனை பாடத்தில் தோல்வி அடைந்தாலும் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என என் அப்பா சொல்வார். அதை தான் நான் இப்போதும் பாலோ செய்கிறேன் என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய யுவன் சங்கர் ராஜா, எனக்கு படம் ரொம்ப பிடித்துள்ளது. எல்லாரும் நல்லா நடித்துள்ளனர். ஒரு குடும்பமாக தான் உள்ளோம். பள்ளி நினைவுகளை பகிர்ந்து கொண்ட யுவன். பிரியாணி படத்தின் போது கார்த்தியை பாட வைத்தேன். அதே போல் அஞ்சான் படத்தின் போது சூர்யாவை பாட வைத்தேன். Drug dealer என்று என்னை சொல்வது எனக்கு தெரியும். இசையால் இவ்வளவு பேரை ரீச் செய்துள்ளது மகிழ்ச்சி தான். மதுரையில் விரைவில் ஒரு இசை கச்சேரி செய்ய உள்ளேன்.