முக்கியச் செய்திகள் சினிமா

கார்த்திக்கும் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்-கருணாஸ்

விருமன் படத்தில் கார்த்தியின் நடிப்பிற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என மதுரையில் நடந்த இசை மற்றும் ட்ரையிலர் வெளியீட்டு விழாவில் நடிகர் கருணாஸ் தெரிவித்தார். 

கார்த்தி, அதிதி நடிப்பில் உருவாகியுள்ள விருமன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற்றது. அதில் நடிகர் கார்த்தி, சூர்யா, கருணாஸ், சூரி, இயக்குனர் ஷங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

நிகழ்ச்சியில் பேசிய கருணாஸ், தம்பி முத்தையா போன்ற இயக்குனர்கள் குறைவாக உள்ளனர். மண் சார்ந்து மக்கள் சார்ந்து திரைப்படம் எடுக்க கூடிய இயக்குனர்கள் குறைவாக உள்ளனர். இந்த படத்தின் இறுதியில் கார்த்தி, பிரகாஷ் நடிப்பு நிச்சயமாக வரும் ஆண்டில் அவருக்கான சிறந்த நடிகர்களுக்கான தேசிய விருதை கிடைக்கும். சூரரை போற்று படத்திற்கு தேசிய விருது கிடைக்கும் என்று முதல் நாள் படப்பிடிப்பில் சொன்னது நான் தான் என்று கூறினார்.

தொர்ந்து பேசிய நடிகர் சூரி, மாறன், விருமன் இருவரும் சேர்ந்து வந்துள்ளது மதுரையே ஆடுகிறது போன்று உள்ளது. விருது வாங்கியுள்ள சூர்யாவிற்கு எனது வாழ்த்துகள். இந்த விருதுகள் அனைத்தும் சினிமாவில் நீங்கள் காட்டும் உழைப்பு . உங்கள் உழைப்புக்கு தான் இந்த விருதுகள் உங்களுக்கு கிடைக்கிறது. எல்லாரும் சிட்டி படமாகவே எடுத்துவிட்டால் நாங்கள் எங்கு நடிப்பது. ஒன்று ஷங்கர் மாதிரி ஆட்கள் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஆனால் அது அவ்வளவு எளிதில் உள்ளே நுழைய முடியாது.

முத்தையா மாதிரி ஆட்கள் தான் எங்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறார்கள். பாரதிராஜா போட்டது தான் அதை தொடர்ந்து எல்லாரும் வருகின்றனர். மண் சார்ந்து மக்கள் சார்ந்து கலாச்சாரம் சார்ந்து எடுக்க கூடிய இயக்குனர் சிலர் தான்.

எல்லா இயக்குனர்களும் இங்கு தேவை தான். இன்று விழா நாயகன் யுவன் சங்கர் ராஜா தான். எப்படி ஹீரோக்களுக்கு அதிக ரசிகர்கள் உள்ளார்களோ அதே மாதிரி யுவன்சங்கர் ராஜாவுக்கும் ரசிகர்கள் உள்ளனர். அந்த லட்சக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன்.இந்த படத்தில் அதிதி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Halley Karthik

குடியரசு துணை தலைவராக ஜெகதீப் தன்கர் தேர்வு

Web Editor

பந்தவ்கர் தேசிய பூங்காவில் காட்டுத்தீ!

எல்.ரேணுகாதேவி