முக்கியச் செய்திகள் சினிமா

தென் மாவட்ட பின்னணியில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக ‘விக்ராந்த்’

தென் மாவட்ட பின்னணியில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக விக்ராந்த் நடிக்க உள்ளார்.

A.S.என்டர்டெயின்மென்ட் சார்பில் S.அலெக்சாண்டர் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது. இந்த படத்தை இயக்குநர் வி.பி.நாகேஸ்வரன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே தொட்டுவிடும் தூரம் என்கிற படத்தை இயக்கியுள்ளார். விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் இன்னொரு கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார். அவருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இப்படத்தில், டிக்கிலோனா புகழ் ஷிரின் கஞ்ச்வாலா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் (ஜெய் பீம்) தமிழ், வேல ராமமூர்த்தி, மதுசூதனன், மாரிமுத்து, ரமா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடிக்கின்றனர். தென் மாவட்டங்களின் வாழ்வியல் சார்ந்து சமூக அக்கறை மற்றும் ஆக்சன் கலந்த குடும்பப் பாங்கான கதை அம்சத்துடன் இந்த படம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

அண்மைச் செய்தி: ‘‘தேவையற்ற விளம்பரங்களில் நடிகர்கள்; நாட்டுக்குச் செய்யும் துரோகம்’ – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா’

மேலும், இப்படத்தை மாசாணி ஒளிப்பதிவு செய்ய இருப்பதாகவும், யுகபாரதி பாடல்களை எழுத இருப்பதாகவும், சண்டைப் பயிற்சியை ராஜசேகரும் மேற்கொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் தொடங்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தேனியில் தொடர்ந்து நடைபெற உள்ளது சொல்லப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஒடுக்கப்பட்டவர்களின் மனசாட்சியாக ஒலிக்கும் ‘ஜெய் பீம்’ திரைப்படம்

EZHILARASAN D

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ரவுடி வெட்டிக் கொலை!

Jeba Arul Robinson

கம்யூனிஸ்டு ஆட்சி அகற்றப்படும் -பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

G SaravanaKumar