“கேம் ஆஃப் த்ரோன்ஸ்” தொடரில் வரும் 3 ட்ரேகன்கள் பார்வையாளர்ளே மெய் சிலிர்க்க வைத்த நிலையில் தற்போது “ஹவுஸ் ஆப் ட்ராகன்” தொடரில் 18 ட்ராகன்கள் இடம்பெற உள்ளன.
மிகுந்த எதிர்பார்ப்பில் வெளியாகிய ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்” சீரிஸின் ஸ்பின் ஆப் தொடரான “ஹவுஸ் ஆப் ட்ராகன்” தொடரின் முதல் எபிஸோடு கடந்த திங்கட்கிழமை 22ஆம் தேதி ஹாட் ஸ்டார் இணையதளத்தில் வெளியானது.
இந்த முதல் எபிஸோடு என்ன கதை, யார் யார் இடம்பெறுவார்கள் எனத் தெளிவாக விலக்கும் வன்னம் இருந்தது. குறிப்பாக எபிசோடின் இறுதி காட்சிகள் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைத்தது. வழக்கம்போல் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்” சீரிஸ் போலவே இதிலும் பிரம்மாண்டத்திற்குப் பஞ்சமில்லை.
கற்பனையே செய்து பார்க்க முடியாத அளவிற்குப் பெரிய செட் அமைப்பு, ஆடை அலங்காரம், ரத்தம் தெறிக்கும் சண்டைக்காட்சி என வியப்பிற்குச் சற்றும் குறிவைக்கக் கூடாதெனப் பணத்தை வாரி இறைத்துள்ளனர்.
இது ஒன்றும் அவர்களுக்குப் புதிதில்லையே, ஏற்கனவே வெளியாகிய ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்” சீரிஸிலும் பிரம்மாண்டங்களுக்குக் குறை வைக்காமல் எத்தனை எத்தனை கதாபாத்திரங்கள்.ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனித் தனியே பேக் ஸ்டோரி எனக் கதை பல அடுக்குகளாக விரிந்து பார்ப்பவரைப் பிரமிக்க வைக்கும். மாயாஜால உலகையும் கற்பனைக்கு அப்பாற்பட்ட லோக்கேஷன்களை நேரெதிரே நிறுத்தியிருப்பார்கள். மேலும் “கேம் ஆஃப் த்ரோன்ஸ்” தொடரில் வரும் 3 ட்ரேகன்கள் பார்வையாளர்களே மெய் சிலிர்க்க வைத்த நிலையில் தற்போது “ஹவுஸ் ஆப் ட்ராகன்” தொடரில் 18 ட்ராகன்கள் இடம்பெற உள்ளன.
சரி இவற்றை எல்லாம் தத்ரூபமாகப் பார்வையாளர்களுக்குக் காண்பிக்க எவ்வளவு செலவு செய்கிறார்கள் தெரியுமா ?
நம் தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகர்கள் என்று கூறப்படுபவர்களின், ஒரு முழு படத்தின் பட்ஜெட்டுக்கு மேலான பணத்தில் வெறும் ஒரு எபிஸோடிற்கு செலவு செய்கிறார்கள். சரியாகச் சொல்லவேண்டும் என்றால் சுமார் 20 மில்லியன் அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் 160 கோடி செலவு செய்து ஒரு எபிசோடை எடுக்கிறார்கள். இந்த “ஹவுஸ் ஆப் ட்ராகன்” தொடரின் முதல் எபிஸோடு 21ஆம் தேதி HBO தளத்தில் வெளியாகியது.வெளியான அன்று ரசிகர்கள் அந்த சீரிஸை காணக்குவிந்ததால் அந்த தளமே சற்று நேரம் முடங்கியது. எவ்வளவு செலவு செய்தாலும் கதைக்கு முக்கியத்துவம் கொடுப்பதாலே இதற்கு இவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள்.
-செ. யுதி







