முக்கியச் செய்திகள் தமிழகம்

எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளை, அழிந்துவிடாமல் காப்பதே, முதல் கடமை – வி.கே. சசிகலா

எம்.ஜி.ஆர் உருவாக்கிய சட்டவிதிகளை, அழிந்துவிடாமல் காப்பதே, முதல் கடமை என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் என்ற பெயரில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து அடிப்படை தொண்டர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருவரால்தான், கட்சியை சிறப்பாக வழிநடத்த முடியும் என மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் கருதியதாலேயே,

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

பொது செயலாளர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள், கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களாலும், தேர்ந்தெடுக்கப்படவேண்டுமென தனித்துவமான சட்ட விதியை உருவாக்கியதாக தெரிவித்துள்ளார். தற்போது, இதனை மாற்றும் வகையில், ஒரு சிலர் செயல்படுவது மிகுந்த வேதனை அளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும், குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் எல்லாவித பலன்களை அடைவதையும், தனது தனிப்பட்ட தேவைகளுக்காக செயல்படுவதையும், தொண்டர்கள் இனியும் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், எம்.ஜி.ஆர். உருவாக்கிய சட்டவிதிகளை, அழிந்துவிடாமல் காப்பதே, நமது முதல் கடமை என தெரிவித்த சசிகலா, அதற்காக தொண்டர்கள் அயராது உழைக்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அரசு மருத்துவமனைகளில் கூடுதலாக 120 படுக்கைகள்!

Jeba Arul Robinson

பேரறிவாளன் விடுதலை – தலைவர்கள் வரவேற்பு

Halley Karthik

தடகளப் பயிற்சியாளர் நாகராஜன் மீது வெளிநாட்டு பெண்களும் பாலியல் புகார்

Gayathri Venkatesan