முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் வரும் 8-ம் தேதி முதல் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவதற்கான தேதி வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, B.E., B.Tech., B.Arch., M.Arch. முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வருகிற 8-ம் தேதி தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 15-ம் தேதி தொடங்கும் என்றும், 3-ம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
மேலும், M.E., M.Tech., MBA, MCA, M.Sc. முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் மார்ச் 8-ம் தேதி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் உள்ள கல்லூரிகளில், ஏற்கனவே இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில், எஞ்சிய பிரிவு மாணவர்களுக்கான வகுப்புகளும் வரும் 8-ம் தேதி தொடங்கும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.அதன்படி, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், அதன் வளாகக் கல்லூரிகள் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் வகுப்புகள் எப்போது தொடங்கும் என்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.