முக்கியச் செய்திகள் செய்திகள்

ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி கட்டணம்: அரசாணை வெளியீடு

சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி உள்ளிட்டவைகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயித்து சுகாதாரத்துறை அரசாணை வெளியீட்டுள்ளது.

ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி தமிழக சுகாதாரத்துறையின் கீழ் அண்மையில் கொண்டு வரப்பட்டது. இதனையடுத்து கட்டணம் தொடர்பாக சுகாதாரத்துறை அரசாணை வெளியீட்டுள்ளது.

MBBS படிப்புக்கு ஆண்டுக்கு 13 ஆயிரத்து 610 ரூபாய் கட்டணமும்,

BDS படிப்புக்கு ஆண்டுக்கு 11 ஆயிரத்து 610 ரூபாய் கட்டணமும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதே போல் MD, MS, MDS படிப்புகளுக்கு ஆண்டுக்கு 30ஆயிரம் ரூபாய் கட்டணமும்,

B.Sc., நர்சிங் உள்ளிட்ட இளநிலை துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு 3 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

முதுநிலை துணை மருத்துவப் படிப்புகளுக்கு ஆண்டுக்கு 5 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களுக்கு, எஞ்சிய பணம் திருப்பித் தரப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Advertisement:
SHARE

Related posts

2 ஆண்டுக்கு ஒரு முறை மானிய விலையில் படகு இயந்திரங்கள்: அனிதா ராதாகிருஷ்ணன்

Gayathri Venkatesan

கேஜிஎப்-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

Halley karthi

கொடைக்கானல்: 75 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்ட பூங்காக்கள்

Vandhana

Leave a Reply