சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் பற்றி எரிந்த தீயை, 3 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் சிலிண்டர்கள் சேமித்து வைக்கப்படும் அறையில், நேற்று மின் கசிவு காரணமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால், மருத்துவமனை வளாகம் முழுவதும் கரும்புகை சூழ்ந்து காணப்பட்டது. சம்பவ இடத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனடியாக நேரில் ஆய்வு மேற்கொண்டனர். இதையடுத்து, 4 தீயணைப்பு வாகனங்களை கொண்டு, 3 மணி நேரம் போராடி, தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், தீ விபத்து ஏற்பட்டவுடன் நோயாளிகளை மருத்துவமனை ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு மீட்டதால், யாருக்கும் பாதிப்பில்லை எனவும், 3 தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகள் உட்பட 33 பேர் தீ விபத்து ஏற்பட்ட அறையில் இருந்ததாகவும், அவர்கள் எவ்வித காயமும் இன்றி மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அண்மைச் செய்தி: ‘பேரறிவாளனுக்கு ஏன் நீதிமன்றமே விடுதலை வழங்க கூடாது? – உச்சநீதிமன்றம் கேள்வி’
தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் தீயை அணைக்கும்போது, 3 ஆக்சிஜன் சிலிண்டர்கள் வெடித்தன. இதனால், அங்கிருந்தவர்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டனர். மேலும், தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்திற்கு அருகே இருக்கும் கட்டடங்களில் உள்ள நோயாளிகளை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து நோயாளிகளை மீட்க சென்ற மருத்துவர்கள் உட்பட 5 பேர், மூச்சுத்திணறல் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.