‘கலைஞர் எழுதுகோல் விருது’ – அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு

ஜூன் 3-ஆம் தேதி சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படவுள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது பதிலுரை ஆற்றிய அவர், மக்களுக்கும் ஆட்சிக்கும் தூதுவராக…

ஜூன் 3-ஆம் தேதி சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்படவுள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் சாமிநாதன் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தின்போது பதிலுரை ஆற்றிய அவர், மக்களுக்கும் ஆட்சிக்கும் தூதுவராக செய்தி மற்றும் விளம்பரத்துறை முக்கிய பங்காற்றி வருவதாக தெரிவித்தார். மேலும், பத்திரிகையாளர் நல நிதியில் இருந்து வழங்கப்படும் மருத்துவ உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும் எனவும், பத்திரிகையாளர் ஓய்வூதிய திட்டத்திற்கான பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்படும் எனவும் அறிவித்தார்.

தமிழில் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகத்திற்கு, மயிலாடுதுறையில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும் எனவும், வேலூரில் உள்ள அண்ணா கலையரங்கம் , அண்ணா பல்நோக்குக் கலையரங்கமாக மாற்றி அமைக்கப்படும் எனவும் அமைச்சர் சாமிநாதன் குறிப்பிட்டார்.

அண்மைச் செய்தி: அரசு மருத்துவமனையில் பற்றி எரிந்த தீ; 3 மணி நேர போராட்டத்திற்கு அணைப்பு

மேலும், தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தை, உலகத்தரத்திற்கு உயர்த்தும் பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தண்டையார்பேட்டை – காமராஜர் நகரில் உள்ள அரசு அச்சக பணியாளர்களுக்கான குடியிருப்புகள் முற்றிலும் இடிக்கப்பட்டு, நவீன வசதிகளுடன் புதிய குடியிருப்புகள் கட்டித்தரப்படும் எனவும் அறிவித்துள்ளார்.

மேலும், முதன்முறையாக அச்சுத்துறைக்கு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் அமைக்கப்படும் எனவும், ஜூன் 3-ஆம் தேதி சிறந்த இதழியலாளருக்கு, கலைஞர் எழுதுகோல் விருது வழங்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். இதேபோல, தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு, “கலைஞர் கலைத்துறை வித்தகர்” விருது வழங்கப்படும் எனவும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.