கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்புத்துறையினர்!

உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுவை  தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர். மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சேடபட்டியை அடுத்த செம்பூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் இனியராஜ் விவசாயி. இவர் தனது தோட்டத்து பகுதியில்…

உசிலம்பட்டி அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுவை  தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டனர்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சேடபட்டியை அடுத்த செம்பூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் இனியராஜ் விவசாயி. இவர் தனது தோட்டத்து பகுதியில் விவசாய பணிகளுக்காக 2 பசுகளை வளர்த்து வந்தார். பசுமாடுகளில் ஒன்று அவரது தோட்டத்திலுள்ள 30 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

இதனை கண்ட இனியராஜ் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உசிலம்பட்டி தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார். தகவலறிந்து விரைந்து தீயணைப்புத்துறை நிலைய அலுவலர் தங்கம் தலைமையிலான தீயணைப்புத்துறை வீரர்கள் கிணற்றில் பாதுகாப்பாக இறங்கி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பசுமாட்டை பத்திரமாக மீட்டு இனியராஜிடம் ஒப்படைத்தனர்.

—அனகா காளமேகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.