‘துணிவு’ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு; ரசிகர்கள் உற்சாகம்

கடந்த மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான ‘துணிவு’ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது.  இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் விஜய் நடித்த வாரிசு…

கடந்த மாதம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான ‘துணிவு’ படத்தின் ஓடிடி வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. 

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் திரைக்கு வந்தது.

அஜித், மஞ்சு வாரியர் நடிப்பில் போனி கபூரின் குறைவான பட்ஜட்டில் எந்த அளவிற்குப் படத்தை முழுமையாக மாற்ற முடியுமோ அந்த அளவிற்கு இயக்கி உள்ளார் வினோத்.

அஜித் நடித்த துணிவு திரைப்படமும் மற்றும் விஜய் நடித்த வாரிசு திரைப்படமும் கடந்த 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரே நாளில் திரைக்கு வந்தது. இதனால் ரசிகர்கள் போட்டிப் போட்டுக்கொண்டு படங்களைக் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் படம் வெளியாகி ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் துணிவு படம் நெட் ஃப்ளிக்ஸ் ஓடிடி தலத்தில் வரும் 8 ஆம் தேதி வெளியாகு என நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே அஜித் நடிக்கும் 62வது படத்தின் ஓடிடி உரிமையை நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவதாகவும் லைகா நிறுவனம் தெரிவித்திருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைப்பதாகவும், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் உருவாக உள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அஜீத் குமார் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் அரவிந்த் சாமி மற்றும் சந்தானம் நடிப்பதாகக் கூறப்பட்ட AK62 படம் பிப்ரவரியில் தொடங்குவதாகக் கூறப்பட்ட நிலையில், தற்போது திடீரென இந்த கூட்டணியில் உருவாகவுள்ள படம் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் AK62 உருவாக உள்ளதாகவும் சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது. அஜித் 62வது படத்தின் இந்த குழப்ப நிலை அஜித் ரசிகர்களுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.