பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் அறிமுகமான நெல்லை மாவட்ட
தெருக்கூத்துக் கலைஞர் நெல்லை தங்கராஜ் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.
நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை இளங்கோ நகர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பேச்சிக்கண்ணு, மகள் அரசியலகுமாரி. தெருக்கூத்துக் கலைஞரான தங்கராஜ், இயக்குநர் மாரி செல்வராஜ் இயத்தில் 2018ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் திரைப்படத்தில் குணச்சத்திர வேடத்தில் நடித்தவர். இவரின் எதார்த்தமான நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தங்கராஜ் மின்சார வசதியில்லாத வீட்டில் வசித்து வந்தார். பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து அவருக்கு அரசு சார்பில் வீடு கட்டிக் கொடுக்கப்பட்டது. இவருக்கு கடந்த புதன்கிழமை உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 5 மணிக்கு உயிரிழந்தார்.
நாளை மதியம் ஒரு மணிக்கு சிந்துப்பூந்துறையில் உள்ள மின் மயானத்தில் இவரது உடல் தகனம் செய்யப்படுகிறது
-ம.பவித்ரா