மாநிலங்களின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சி; மு.க.ஸ்டாலின்

மாநிலங்களின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கன்னியாகுமரி மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பரப்புரை…

மாநிலங்களின் உரிமைகளை பறிக்க மத்திய அரசு தொடர்ந்து முயற்சிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் கன்னியாகுமரி மாவட்ட திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்,

இந்திய துணை கண்டத்தின் துவக்கமான கன்னியாகுமரியில் திருவள்ளுவருக்கு கம்பீரமாக வானுயர சிலை அமைத்தவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என குறிப்பிட்டார். வடகிழக்கு பருவமழையின்போது கன்னியாகுமரியில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மீளவும், சேதமடைந்த கட்டடங்களை சீரமைக்கவும் நிதி வழங்கக் கோரி பிரதமருக்கு தாம்கடிதம் எழுதியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், இதுவரை கேட்ட நிவாரண நிதி வரவில்லை என தெரிவித்தார்.

மேலும் , அண்மையில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்த ஒன்றிய அரசு, மக்கள் நல திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவில்லை என குற்றம் சாட்டிய முதலமைச்சர், மாநிலங்களின் உரிமைகளை பறிக்கக் கூடிய முயற்சிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்தார். மாநிலங்களுக்கான வருவாயில் பத்திரப்பதிவு மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் முக்கியமானது, ஆனால் ஒரே நாடு ஒரே பத்திரப்பதிவு திட்டத்தின் மூலம் அந்த வருவாயையும் மத்திய அரசு பறித்துக்கொள்ள முயல்வதாகவும் ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.