முக்கியச் செய்திகள் தமிழகம்

‘தமிழ்நாடு மக்களின் அச்சத்தை போக்க வேண்டும்’ – மநீம வலியுறுத்தல்

மின் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தமிழ்நாடு அரசு ரூ.926 கோடி கட்டண பாக்கி வைத்துள்ளதால், மின்சாரம் வாங்கத் தமிழகத்துக்குத் தடை விதித்திருப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

மத்திய மின்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மின்சார உற்பத்தி நிறுவனங்கள் மூலம் மாநிலங்களில் உள்ள மின் வினியோக நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்கப்படுகிறது. Gencos எனப்படும் இந்த உற்பத்தி நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையைப் பல மாநிலங்கள் நீண்ட காலமாகத் திருப்பி செலுத்தாமல் உள்ளன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி, தமிழ்நாடு உள்பட 13 மாநிலங்கள் 5 ஆயிரம் கோடி ரூபாய் பாக்கி வைத்து உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தெலங்கானா ஆயிரத்து 380 கோடி ரூபாயும், தமிழ்நாடு 926 கோடி ரூபாயும் நிலுவை வைத்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்தச் செய்தி அதிர்ச்சியளிப்பதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

அண்மைச் செய்தி: ‘‘கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளது’ – காவல் ஆணையர் அன்பு ஐபிஎஸ்’

இது தொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள ட்வீட்டர் பதிவில், மின் உற்பத்தி நிறுவனங்களுக்குத் தமிழக அரசு ரூ.926கோடி கட்டண பாக்கி வைத்துள்ளதால், மின்சாரம் வாங்கத் தமிழகத்துக்குத் தடை விதித்திருப்பதாக மத்திய அரசு உத்தரவிட்டுள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. மாநிலத்தின் மின்சாரத் தேவையில் 3ல் ஒருபங்கிற்கும் குறைவாகவே தமிழக மின்வாரியம் உற்பத்தி செய்கிறது. வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்க முடியாவிட்டால், மின் தட்டுப்பாடு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை,தொழிற்துறையானது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

குறைந்த தொகையே பாக்கி உள்ளதாக மின்வாரியம் விளக்கம் அளித்தாலும், அந்தத் தொகையினை உடனடியாகச் செலுத்தி தடையை விலக்கச் செய்யத் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீண்டும் அந்த “இருண்ட காலம்” வந்துவிடுமோ என்ற தமிழ்நாடு மக்களின் அச்சம் போக்கப்படவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்; வானிலை ஆய்வு மையம்

EZHILARASAN D

தற்காலிக அடிப்படையில் ஆசிரியர் நியமனம்: மநீம கண்டனம்!

Web Editor

உப்புமாவில் விஷம் வைத்து குழந்தையை கொன்ற தாய்

G SaravanaKumar