விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதிக்கு இன்று பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு கடந்த 2017 ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் இவர்கள் இருவரும் தங்களது முதல் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதுகுறித்து விராட் கோலி தனது டுவிட்டர் பக்கத்தில், அனைவரின் அன்புக்கும், பிராத்தனைகளுக்கும் நன்றி எனவும், தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதைத்தொடர்ந்து இருவருக்கு கிரிக்கெட் மற்றும் சினிமா பிரபலங்கள் , ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.







