மாஸ்டருக்கு காப்புரிமை பிரச்னை… சிக்கலில் தயாரிப்பு நிறுவனம்!

மாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் உரிமம் பெறாமல் பயன்படுத்திய பாடலுக்காக தயாரிப்பு நிறுவனம் பிரச்னையை எதிர்கொண்டுள்ளது. சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள…

மாஸ்டர் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் உரிமம் பெறாமல் பயன்படுத்திய பாடலுக்காக தயாரிப்பு நிறுவனம் பிரச்னையை எதிர்கொண்டுள்ளது.

சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர்கள் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இந்தப் படம் ஜனவரி 13ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஆண்டு மார்ச் 15ம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் விஜய், அனிருத் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இசை வெளியீட்டு விழாவில் தங்களது பாடல்களை உரிமம் பெறாமல் பயன்படுத்தியதாக Novex communications என்ற தனியார் நிறுவனம் சென்னை காப்புரிமை அமலாக்கப்பிரிவில் புகார் அளித்துள்ளது. அந்த புகார் மீது முறையீடு செய்து எழும்பூரில் உள்ள பெருநகர் தலைமை நீதிமன்றத்தை அந்த நிறுவனம் அணுகியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, XB Film Creators நிறுவன உரிமையாளர் சேவியர் பிரிட்டோ மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு காப்புரிமை அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

Think music நிறுவனத்தின் பாடல்கள் உரிமம் Novex Communication நிறுவனத்திடம் இருப்பதாகவும், அந்த பாடல்களை உரிமம் பெறாமல் இசை வெளியீட்டு விழாவில் பயன்படுத்தியதற்காக சட்ட நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply