மேக்கப் போட்டு ‘பதான்’ ஷாருக்கானாக மாறிய ரசிகை..! வைரல் வீடியோ

இன்றைய காலத்தில் ஆண், பெண் என அனைவருமே தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் அலாதியான விருப்பதுடனேயே இருக்கின்றனர். அப்படிபட்ட அந்த அழகை மெருகேற்ற மிக முக்கியமாக பயன்படுவது மேக்கப் தான். தற்போது ஆண், பெண்…

இன்றைய காலத்தில் ஆண், பெண் என அனைவருமே தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் அலாதியான விருப்பதுடனேயே இருக்கின்றனர். அப்படிபட்ட அந்த அழகை மெருகேற்ற மிக முக்கியமாக பயன்படுவது மேக்கப் தான்.

தற்போது ஆண், பெண் என இருபாலருக்கும் தனித்தனியே அழகு நிலையங்கள் பெருகி விட்டதோடு அதில் பயன்படுத்தபடும் மேக்கப் பொருட்களின் எண்ணிக்கையும், விலையும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. பொதுவாக மேக்கப் என்றவுடன் திருமணம், விழாக்கள் போன்ற நிகழ்வுகளே நம் நினைவுக்கு வந்தாலும். இன்று பல
மேக்கப் ஆர்டிஸ்டுகள் அதனையே ஒரு கலைநயம் மிக்க துறையாக மாற்றி தங்களது திறமைகளை நாளுக்கு நாள் மெருகேற்றி புதுவிதமான மேக்கப்புகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது மக்களால் அதிகம் ரசிக்கப்படுவது, மேக்கப் மூலம் ஒருவரை மற்றொருவர் போல் மாற்றும் முயற்சிகள் தான். இந்த மாதிரியான முயற்சிகளை பல மேக்கப் ஆர்டிஸ்டுகள் தொடந்து செய்து தங்களது சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வந்தாலும், அதில் சிலரது திறமைகள் அதிகபடியான கவனத்தை பெறக்கூடிய
ஒன்றாக விளங்குகிறது. அந்த வரிசையில் தீக்ஷிதா என்ற பெண் மேக்கப் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் தனது திறமையான மேக்கப் மூலம் சமீபத்தில் வெளிவந்த ‘பதான்’ பட ஷாருக்கான் போல தனது தோற்றத்தை மாற்றிய விடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மேலும் அது தற்போது இணையத்தில் பெரும்பாலானோரை கவர்ந்து பலராலும் ஷேர் செய்யப்பட்டு தீயாக பரவியும் வருகிறது. சரியாக எடிட் செய்யப்பட்ட அந்த வீடியோவில், துவக்கத்தில் தனது உண்மையான புருவங்களை அடித்தளத்தின் கீழ் மறைத்து, புதியவற்றை ‘வரைய’ தொடங்குகிறார் தீக்ஷிதா. பின்னர் அடுத்த சில நொடிகளில், அவரது மாயாஜால மேக்கப் திறமைகளை பயன்படுத்தி முழு முகத்தையும் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானின் சமீபத்திய திரை அவதாரமான பதானின் முகமாக மாற்றுகிறார்.

இது மாதிரியான முயற்சிகளை ஷாருக்கானின் ரசிகையாக பல முறை அவர் முயற்சி செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தாலும் இந்த முறை மிக சிறப்பாக போஸ்ட் செய்யப்பட்ட ஒரே வாரத்திற்குள் 8 லட்சத்திற்கும் அதிகமான விருப்பங்களைப் இந்த வீடியோ பெற்றுள்ளது என்பதே கூடுதல் சிறப்பு.

  • பி. ஜேம்ஸ் லிசா
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.