பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா – ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

பிரசித்திபெற்ற வரதராஜ பெருமாள் கோயில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்ற நிலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் உள்ள பிரசித்திபெற்ற தென்கலை வரதராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேர்திருவிழா நடப்பது வழக்கம்.

அதன்படி 21-ம் ஆண்டு பிரமோற்சவ விழா கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா இன்று காலை நடந்தது. இதில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற எதிர்கட்சித் தலைவரும், தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான சிவா ஆகியோர் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.

இவ்விழாவில் வில்லியனூர் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து கோவிந்தா! கோவிந்தா!! என்று கோஷமிட்டு இழுத்து சென்றனர். தேரானது கோயிலில் இருந்து புறப்பட்டு நான்குமாட வீதிகள் வழியாக மீண்டும் கோயிலை வந்தடைந்தது. தேர் திருவிழாவை முன்னிட்டு ஆங்காங்கே அன்னதானமும் நடைபெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.