நடிகை நூர் மாளபிகா தாஸ் மும்பையில் தனது வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்தவர் நூர் மாளபிகா தாஸ். விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வந்த இவர், இந்தி வெப்தொடர்கள் மூலம் பிரபலமானார். இவர், சிஸ்கியான், சரம்சுக் உள்ளிட்ட பல வெப்தொடர்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலிவுட் நடிகையான கஜோல் நடித்த ‘தி டிரையல்’ வெப்தொடரில் இவர் நடித்துள்ளார். அந்த கதாபாத்திரம் அவருக்கு பெயரையும், புகழையும் வாங்கிக் கொடுத்தது. இவர் மும்பை லோகந்தவாலா பகுதியில் ஒரு வீடு எடுத்து தங்கி நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.







