தமிழகம் செய்திகள் சினிமா

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர்: உதவிக்காக காத்திருக்கும் குடும்பம்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகர் ராஜ முஸ்தபாவுக்கு உதவிட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளநர். .
எம்.ஜி.ஆர், சிவாஜி ரஜினி,கமல் நடித்த திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராகவும், எம்.ஜி.ஆரின் குருவாகவும் இருந்த ஸ்டன்ட் சோமுவின் மகன் சண்முகராஜன் என்கிற ராஜ முஸ்தபா. இவரும் கடந்த காலங்களில் சாவி, கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் போன்ற பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சில திரைப்படங்களில் இணை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.  இவர் திரைப்படம் நடிப்பதற்கு வாய்ப்புகள் குறைந்தது.  இதனால் சென்னையிலிருந்து ஒசூர் அருகே பாகலுாரில் தனியார் வாடகை வீட்டில் 10 ஆண்டுகளாக வசித்து வருகிறார்.  இந்நிலையில் அவருக்கு தற்பொழுது வாய்புற்றுநோய் காரணமாக கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவிற்கு கூட வழியில்லாமல் சிரமப்பட்டு வருகிறார்.
இவர் தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்தில் வாழ்நாள் உறுப்பினராக இருந்து வருகிறார். இவரது மகன் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சாலை விபத்தில்இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகிறார். இதனால் வாழ்வு இழந்து தவிக்கும் தங்கள் குடும்பத்திற்கு முதலமைச்சரும், நடிகர் சங்கமும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என அவரது மனைவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் சங்கத்தில் பலமுறை கூறி எந்த பலனும் இல்லாததால் மூத்த நடிகர்கள் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
—-அனகா காளமேகன்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா- சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

Jayasheeba

நளினி, முருகனுக்கு 30 நாட்கள் மட்டுமே விடுப்பு அளிக்க முடியும்: அமைச்சர் ரகுபதி

Gayathri Venkatesan

3ம் அலையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது: அமைச்சர் மூர்த்தி 

EZHILARASAN D