சிங்கப்பூரின் முன்னாள் பிரதம்ர் லீ குவான் யூ-விற்கு சிலை அமைப்பதை வரவேற்பதாக மன்னார்குடி மக்கள் மகிழ்ச்சியில் தெரிவித்துள்ளனர்.
சிங்கப்பூர், ஜப்பான நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் தமிழ் சங்கம் சார்பில் தமிழ் கலை பண்பாட்டு நிகழ்ச்சியில் பேசினார். அவர் அப்போது சிங்கப்பூரின் முதல் பிரதமர் லீ குவான் யூ-விற்கு மன்னார்குடியில் சிலை அமைக்கப்படும் என அறிவித்தார்.
இது குறித்து மன்னார்குடி, பரவாக்கோட்டை, மேல திருப்பாலக்குடி கிராமத்தை சேர்ந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 1960-களில் ஏற்பட்ட பஞ்சம் ஏற்பட்டது. அப்போது சிங்கப்பூர் அரசு தொழிலாளர்களை அழைத்துச் செல்ல இலவச கப்பல் பயணத்தை அறிமுகப்படுத்தியதன் விளைவாக தான் மன்னார்குடி, சுற்றுவட்டார கிராமப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சிங்கப்பூருக்கு வேலைக்குச் சென்றனர்.
அதனால் ஏழை விவசாயிகளை பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களாக மாற்றியது. மன்னார்குடி மூத்த விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ், பாக்கியலட்சுமி தம்பதியருக்கு லீ குவான் யூ இறந்த நாளன்று ஆண் குழந்தை பிறந்தது அதற்கு அவரது பெயரை சூட்டி மகிழ்ந்தனர்.
நமது தமிழகமும் சிங்கப்பூரை போன்று வளர்ச்சி அடையும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. மேலும் லி குவான் யூ-விற்கு சிலை மன்னார்குடியில் அமைக்க இருப்பது பாராட்டுக்குரியது.
மேலும் முதலமைச்சருக்கு உறுதுணையாக இருந்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஆகியோருக்கு நன்றிகளை தெரவித்துக்கள்வதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.
—அனகா காளமேகன்






