அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தொடரும் அமலாக்கத்துறை விசாரணை!

மத்திய குற்றப்பிரிவு விசாரணை ஆவணங்களை அடிப்படையாக கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 4-வது நாளாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போக்குவரத்து துறையில் வேலை தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி…

மத்திய குற்றப்பிரிவு விசாரணை ஆவணங்களை அடிப்படையாக கொண்டு அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் 4-வது நாளாக அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்து துறையில் வேலை தருவதாக கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கில் 2-வது முறையாக விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஏற்கனவே நடத்தி உள்ளனர்.

பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோரிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணையை நடத்தி அதன் ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அந்த விசாரணை ஆவணங்களை நீதிமன்றம் மூலமாக பெற்றுள்ளனர். அமைச்சர் செந்தில் பாலாஜியை 5 நாட்கள் காவலில் எடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2-வது முறையாக நடத்திய விசாரணை ஆவணங்களை அடிப்படையாக கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் செந்தில் பாலாஜியிடம் இன்று விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பணத்தை கொடுத்து ஏமாந்தவர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்டோரின் வாக்குமூலம் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்விகளை தயாரித்து அதன் அடிப்படையில் செந்தில் பாலாஜியிடம் விசாரணையை முடுக்கி விட்டுள்ளதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.