நிர்வாகிகளுடனான ஆலோசனைக்குப் பின்னர் சட்டப்பேரவைத் தேர்தலில் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கப்படும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் தெரிவித்தார்.
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமார் அவரது மனைவி ராதிகா சரத்குமார் ஆகியோர் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். தரிசனம் செய்துவிட்டு வந்த சரத்குமார் செய்தியாளிகள் சந்திப்பில் பேசிய அவர், கடந்த மாதம் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த பிறகு காமாட்சி அம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்த வந்ததாக கூறிய அவர், ரஜினிகாந்த் அவருடைய சொந்த கருத்தை பதிவு செய்திருக்கிறார். அவரின் அரசியல் பற்றி பேச விரும்பவில்லை. அவர்களின் உடல் நலம் என்றும் சிறப்பாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
மேலும் கலை உலக பயணமாக இருந்தாலும் சரி வாழ்க்கையில் எடுத்து வைக்கின்ற அனைத்து பணிகளும் சிறப்பாக நலமாக இருக்க வேண்டும் என்ற நலம்விரும்பி நான் எனவும் பேசினார்.ஜனவரி 22ம் தேதி முதல் 5 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் சந்தித்து ஆலோசனை கேட்ட பின் அரசியல் நிலைப்பாடு குறித்து தெரிவிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.







