பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு தனி நலவாரியம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களுக்கு தனியே ஒரு அமைப்பு சாரா நலவாரியம் அமைக்கப்படும் என நவம்பர் 11ஆம் தேதி விருதுநகரில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி, பட்டாசு தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைப்பதற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. நலவாரிய தலைவராக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியத்தில் ஏற்கனவே பதிவு செய்துள்ள 62 ஆயிரத்து 661 பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலை தொழிலாளர்களை உறுப்பினர்களாக கொண்டு நலவாரியம் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில் பணிபுரியும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களும் புதிய நலவாரியத்தில் உறுப்பினர்களாக சேர்ந்து பயன்பெறலாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.