தமிழ்நாடு முழுவதும் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைதியான முறையில் நடந்ததாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
டிஜிபி சைலேந்திர பாபு அளித்த அவர் பேட்டியில் அவர் கூறியதாவது,
“இன்று நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து தமிழக டி.ஜி.,பி., சைலேந்திர பாபு அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் இன்று மிகவும் அமைதியான முறையில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து முடிந்தது. ஒரு சில இடங்களில் சிறு பிரச்னைகள் ஏற்பட்டாலும் உடனடியாக விரைந்து சரி செய்யப்பட்டது. சில நிகழ்வுகள் குறித்து சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பதற்றமான வாக்குசாவடிகளைில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால், வன்முறை சம்பவங்கள் தவிர்க்கப்பட்டது”. என தெரிவித்தார்.







