வாக்கு செலுத்தாமல் இருப்பது தேசத் துரோக குற்றம்; சீமான்

சென்னை ஆலப்பாக்கம் வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வாக்கு செலுத்தாமல் இருப்பது தேசத் துரோக குற்றம் என தெரிவித்துள்ளார்.   நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பல்வேறு கட்சித்…

சென்னை ஆலப்பாக்கம் வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியில் வாக்களித்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், வாக்கு செலுத்தாமல் இருப்பது தேசத் துரோக குற்றம் என தெரிவித்துள்ளார்.

 

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் தங்களது வாக்குகளைச் செலுத்திய நிலையில். சென்னை ஆலப்பாக்கம் வேளாங்கண்ணி மேல்நிலைப் பள்ளியில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்.

“நீண்ட காலமாக வாக்கு செலுத்தி ஏமாற்றமடைந்த மக்களுக்கு உள்ள வெறுப்புணர்வால் வாக்கு பதிவு மந்தமாக உள்ளதாகவும், மறைமுக தேர்தல் என்பதால் மக்களுக்கு ஆர்வம் குறைவாக உள்ளதாகவும், மறைமுக தேர்தல் கிளி ஜோஷியம் பார்ப்பது போல் எனவும் அவர் விமர்சித்தார். வெற்றி பெறும் பிற கட்சி வேட்பாளர்கள் ஐந்து ஆண்டுகள் கூட முழுமையாக வேலை செய்ய மாட்டார்கள் எனக் குறிப்பிட்ட சீமான், நாங்கள் தோற்றாலும் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு வேலை செய்வதாகத் தெரிவித்தார். மேலும், வாக்கு செலுத்தாமல் இருப்பது தேசத் துரோக குற்றம் எனவும், இதனால் தட்டி கேட்கும் உரிமையை இழப்பதாகவும் அவர் கூறினார். மக்கள் நல்லவர்களுக்கு வாக்கு செலுத்தினால் எதிர்காலம் மக்களுக்கு என்றும், இல்லையெனில் ஊழல்வாதிகளுக்கு தான் எதிர்காலம்” எனவும் சீமான் தெரிவித்தார்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.