தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய தரவுகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 17) வெளியிட்டது. தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் திரட்டிய நிதி தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ வங்கி தேர்தல் ஆணையத்திற்கு…

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான புதிய தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (மார்ச் 17) வெளியிட்டது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் திரட்டிய நிதி தொடர்பான விவரங்களை எஸ்.பி.ஐ வங்கி தேர்தல் ஆணையத்திற்கு அளித்த நிலையில்,  தற்போது அவ்விவரங்கள் வெளியாகியுள்ளன. மேலும், அரசியல் கட்சிகளுக்கும் நன்கொடை வழங்கிய நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களும் இடையேயான தொடர்பு குறித்த விவரங்களும் வெளியாகின.

அதன்படி, 6060 கோடி ரூபாய் பெற்று பாஜக அதிக தேர்தல் நிதி பெற்றிருந்தது தெரியவந்தது. கோவையைச் சேர்ந்த லாட்டரி நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் நிறுவனம் 1200 கோடிக்கும் அதிகமாக அரசியல் கட்சிகளுக்கு நிதி வழங்கியிருந்தது தெரியவந்தது.

தொடர்ந்து மார்ச் 15-ம் தேதி இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தேர்தல் பத்திர எண்களை எஸ்.பி.ஐ ஏன் வழங்கவில்லை என கேள்வி எழுப்பியது. தேர்தல் ஆணையத்திடம் தேர்தல் பத்திர எண்களை வழங்கவும் எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

இந்நிலையில் தேர்தல் பத்திரங்கள் குறித்த உச்ச நீதிமன்ற பதிவேட்டில் இருந்து டிஜிட்டல் வடிவில் பெறப்பட்ட தரவுகளை இந்திய தேர்தல் ஆணையம் இன்று தனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. 2018-19-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு முந்தைய தேர்தல் பத்திர விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. https://www.eci.gov.in/candidate-politicalparty என்ற இணையதளத்தை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேசிய, மாநில மற்றும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளின் நிதி விவரங்களும் அந்த தரவில் இடம்பெற்றுள்ளன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.