பேருந்தில் தொங்க வேண்டாம் என கூறிய ஓட்டுநர் – தாக்கிய மாணவர்கள்

பேருந்தில் தொங்கியவாறு பயணித்த மாணவர்களை ஓட்டுநர் கண்டித்ததால், மாணவர்கள் ஓட்டுநரை தாக்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. காஞ்சிபுரத்திலிருந்து புரிசைக்கு செல்லும் அரசு பேருந்தில் முன் படியில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தொங்கியவாறு…

பேருந்தில் தொங்கியவாறு பயணித்த மாணவர்களை ஓட்டுநர் கண்டித்ததால், மாணவர்கள் ஓட்டுநரை தாக்கிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

காஞ்சிபுரத்திலிருந்து புரிசைக்கு செல்லும் அரசு பேருந்தில் முன் படியில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தொங்கியவாறு பயணித்துள்ளனர். இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மேலே ஏறி வரும் படி கூறியுள்ளார்.இதனால் ஓட்டுநருடன் பள்ளி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பகுதியில் பேருந்தினை நிறுத்தி அம்மாணவர்களிடம் படியில் பயணித்தால் பேருந்தைவிட்டு இறங்கி விடுங்கள் என்று ஓட்டுநர் கூறியுள்ளார்.

இதனால் கோபமடைந்த மாணவர்கள் ஓட்டுநரின் கண்ணத்தில் அறைந்துவிட்டு ,கற்களை கொண்டு ஓட்டுநரை தாக்கி தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பொதுமக்கள் ஒன்று சேரவே அங்கிருந்து மாணவர்கள் நான்கு பேரும் தப்பியோடியுள்ளனர். அவர்களில் ஒரு மாணவனை பிடித்த 40வயது மதிக்கதக்க ரஜினி என்பவரை அம்மாணவன் தாக்கிய நிலையில் இதில் அவருக்கு தலையில் பலத்த காயமுற்று இரத்தம் சொட்டியுள்ளது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்கள் அம்மாணவனை பிடித்து சிவகாஞ்சி போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பள்ளி மாணவனால் தாக்கப்பட்ட நபர் மற்றும் பொதுமக்கள் மாணவனை பிடித்த காட்சிகள் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. தமிழகத்தில் சில நாட்களாகவே பள்ளி,கல்லூரி மாணவர்கள் பொது இடங்களில் ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுவதும், வகுப்பறையில் மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி அடங்கிய நிலையில் தற்போது மீண்டும் தலையெடுக்க தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.