நெல்லையில் வில்லிசை கலைஞரை ஒருமையில் பேசி தாக்கிய ஓட்டுநர்… வைரலாகும் வீடியோ..!

நெல்லையில் ஓடும் பேருந்தில் வில்லிசை கலைஞரை ஓட்டுநர், ஒருமையில் பேசி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடியை சேர்ந்தவர் பூமிநாதன். இவர் ஒரு வில்லிசை கலைஞர்.…

நெல்லையில் ஓடும் பேருந்தில் வில்லிசை கலைஞரை ஓட்டுநர், ஒருமையில் பேசி தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம், திருக்குறுங்குடியை சேர்ந்தவர் பூமிநாதன். இவர் ஒரு வில்லிசை கலைஞர். முக்கூடல் செல்வதற்காக ஆலங்குளம் செல்லும் அரசு பேருந்தில் இவர் சென்றுள்ளார். பின்னர் பயணச்சீட்டு வாங்கும் போது வில்லிசை கலைஞருக்கு அரசு வழங்கிய சலுகை கட்டண அனுமதியை நடத்துநரிடம் பூமிநாதன் வழங்கியுள்ளார்.

ஆனால் அதனை ஏற்க மறுத்த நடத்துநர் வில்லிசை கலைஞர் பூமிநாதனை ஒருமையில் பேசியுள்ளார். மேலும் பூமிநாதனை அவர் தாக்கியுள்ளார். இதனை பேருந்தில் பயணித்த சகபயணிகள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் வில்லிசை கலைஞரை தாக்கிய நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.