அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் விஜய் அறுவை சிகிச்சை செய்து கொண்ட தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரை சந்தித்து நலம் விசாரித்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்து உள்ளார். படபிடிப்புகள் ஏறத்தாழ முடிவடைந்த நிலையில், இறுதிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படம் அக்டோபர் 19ஆம தேதி ரிலீசாகிறது.
இதனைத்தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கிறார். இதற்காக அமெரிக்கா சென்ற நடிகர் விஜய் அங்கு நடைபெற்ற போட்டோ ஷுட்டில் கலந்து கொண்டார். இதனைத்தொடர்ந்து செவ்வாய் கிழமை ( செப்டம்பர் 12)அவர் சென்னை திரும்பினார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரை அவர் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் தாயர்ர் ஷோபாவுடன் அவர் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகி வருகிறது.







