சட்டப் பேரவையை எப்போது கூட்ட வேண்டும் என்பது பேரவை செயலகத்திற்கு தெரியும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கத்தில் அம்மா கிளினிக்கை அமைச்சர் ஜெயக்குமார் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா இல்லாத ஆண்டாக இந்தாண்டு இருக்க வேண்டும் என்றார். சட்டப் பேரவையை எப்போது கூட்ட வேண்டும் என்பது சட்டப் பேரவை செயலகத்திற்கு தெரியும் என்றும் அவர் பதிலளித்தார்.
மேலும், கடந்த 2011, மற்றும் 2016-ல் தோற்றது போல் வரும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் திமுக தோல்வி அடையும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.







