முக்கியச் செய்திகள் இந்தியா

நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் இன்று தடுப்பூசி ஒத்திகை!

தமிழகம் உள்பட நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெறுகிறது.

முன்கள பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் சுமார் 30 கோடி பேருக்கு முதற்கட்ட தடுப்பூசி போட மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக பஞ்சாப், அசாம், ஆந்திரா மற்றும் குஜராத்தில் இரண்டு நாட்கள் ஒத்திகை நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்திலும் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, நெல்லை என 17 இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறவுள்ளது.

இந்நிலையில், சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தடுப்பூசி ஒத்திகைக்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாகக் கூறினார். தமிழகத்தில் சுமார் இரண்டரை கோடி தடுப்பூசிகளை சேமிக்கும் அளவுக்கு நிலைமை இருப்பதாகவும், மருத்துவப் பணியாளர்களும், முதியவர்களும் அதிக அளவில் இருப்பதால், தமிழகத்திற்கு அதிக எண்ணிக்கையில் தடுப்பூசி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.

Advertisement:

Related posts

கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் இருந்து மன்மோகன் சிங் டிஸ்சார்ஜ்!

Halley karthi

கோயில் நிலத்தில் உள்ள வாடகைதாரர்களை ஒழுங்குபடுத்துவது குறித்து விரைவில் முடிவு: சேகர்பாபு

Ezhilarasan

தமிழ்நாட்டில் ஆக்சிஜன் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கும் பணி நிறைவு: மா.சுப்பிரமணியன்

Vandhana

Leave a Reply