ஈரோட்டில் தவெக தலைவர் விஜயின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது,
“பொதுவாக நல்ல காரியங்கள் தொடங்குவதற்கு முன்னால் மஞ்சள் எடுத்து விட்டு தான் தூங்குவார்கள். நமது கொடியும் மஞ்சளுடன் உள்ளது. மஞ்சளை பத்தி இங்க போய் பேசாமல் வேற எங்கே பேசுவது. இது விவசாயத்திற்கு பேரு போன மண். விவசாயத்திற்கு கால்வாய் காளிங்கராயன் அணை வெட்டியதில் உணர்வுபூர்வமான விஷயம் உள்ளது. மனிதனால் எதையும் சாதித்து காட்ட முடியும். விஜய் மீது அவதூறு சொல்லி மக்களிடம் இருந்து பிரிக்கலாம் என்று பார்க்கிறார்கள். இந்த விஜயை மக்கள் ஒரு போதும் கைவிட மாட்டர்கள்.
வள்ளுவர் கோட்டத்திற்கு கட்டுற அக்கறையை மக்கள் வாழ்வுரிமைக்கு காட்டலாமே? அண்ணாவும் எம்ஜிஆரும் தமிழ்நாட்டின் சொத்து. பெரியார் பெயரைச் சொல்லி யாரும் தயவு செய்து கொள்ளையடிக்காதீர்கள். பெரியாரைச் சொல்லி கொள்ளையடிக்கிற இவர்கள் தான் அரசியல் எதிரி. கொள்கை எதிரி திமுக தான். எதிரிகள் யாரும் என்று சொல்லிவிட்டு களத்துக்கு வந்திருக்கிறோம் .
2026 யாரு களத்தில் இருக்கிறார்களோ அவர்களை மட்டும் தான் எதிர்ப்போம். களத்தில் இல்லாதவர்களை எதிர்ப்பதை விட எங்களுக்கு வேறு வேலை நிறைய இருக்கிறது. தமிழ்நாட்டில் ஆறுகளை சுத்தப்படுத்த பல ஆயிரம் கோடி ஒதுக்குவோம் என்று சொன்னார்களே செய்தார்களா? சிறுகுறு தொழில் முனைவோர்கள் மின்சார கட்டணத்தால் எவ்வளவு தொழில்கள் பாதிக்கப்படுகிறது.
நான் சலுகைகளுக்கான எதிரானவன் கிடையாது. மக்கள் காசை மக்களுக்கு செய்வதை எப்படி இலவசம் என்று சொல்லலாம். நம்ம ஆட்சியில் சட்டம் ஒழுங்கு விஷயத்தில் சமரசம் கிடையாது. திமுக ஒரு தீய சக்தி.. தவெக ஒரு தூய சக்தி. இந்த இரு கட்சிகளுக்கு இடையேதான் போட்டியே. சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பில் தமிழ்நாடே சந்தி சிரிக்கிறது”
இவ்வாறு தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.







