மின்வெட்டு; போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தேமுதிக

மின்வெட்டு ஏற்படுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில்…

மின்வெட்டு ஏற்படுவதை தடுக்க போர்க்கால அடிப்படையில் திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் உட்கட்சித் தேர்தல், கட்சியின் பொதுக்குழு கூட்டம் மற்றும் விஜயகாந்தின் 70-வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு இரண்டாவது முறையாக நடைபெறும் இந்த ஆலோசனை கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுtamilnadள்ளன.

அதன்படி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடும் வகையில், பட்டி தொட்டி எங்கும் கொடியேற்றியும், இனிப்புகள் வழங்கியும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கியும், தமிழக மக்களின் நல்வாழ்விற்காக நலத்திட்ட உதவிகள் வழங்கியும், மகிழ்ந்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிகப்படியான பருத்தி ஏற்றுமதியை குறைத்து, பதுக்கலை நீக்கி, பருத்தி தொழிலாளர்களை காப்பாற்றிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைச் செய்தி: ‘2020-21ல் கட்சிகளுக்கான நன்கொடை 41.5% ஆக குறைவு’

அதேபோல, மின்வெட்டுக்கான காரணத்தை அறிந்து, அதன் குறைபாடுகளை நீக்கி தமிழகத்தை மின்மிகை மாநிலமாக மாற்றி, தமிழக மக்களையும், மாணவர்களையும் மின்வெட்டில் இருந்து காப்பாற்றிட, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மத்திய அரசுக்கு உரிய அழுத்தத்தைக் கொடுத்து கச்சத்தீவை மீட்டு எடுக்கவேண்டும் எனவும், தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை, கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் நடக்காமல் தமிழகத்தை அமைதிப் பூங்காவாக காப்பது, பெட்ரோல், டீசல் என அனைத்து விலைவாசி உயர்வையும் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.