2020-21ல் கட்சிகளுக்கான நன்கொடை 41.5% ஆக குறைவு

2020-21-ல் பாஜகவுக்கு ரூ.477 கோடியும், காங்கிரஸூக்கு ரூ.74 கோடி நன்கொடை கிடைத்துள்ளது பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் சட்ட விதிகளின்படி அரசியல் கட்சிகள் 20,000 – க்கு மேல் பெற்ற நன்கொடைகள் குறித்த…

2020-21-ல் பாஜகவுக்கு ரூ.477 கோடியும், காங்கிரஸூக்கு ரூ.74 கோடி நன்கொடை கிடைத்துள்ளது

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் சட்ட விதிகளின்படி அரசியல் கட்சிகள் 20,000 – க்கு மேல் பெற்ற நன்கொடைகள் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன்படி, 2020-21 ஆம் நிதியாண்டில் தாங்கள் பெற்ற நன்கொடை குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதனை தேர்தல் ஆணையம் மக்கள் பார்வைக்கு வெளியிட்டுள்ளது. அதில், 2020-21ல் கட்சிகளுக்கான நன்கொடை 41.5% ஆக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

அண்மைச் செய்தி: ‘மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் மறுசீரமைப்பு’

மத்தியில் உள்ள மிக முக்கிய கட்சியான பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியின் பங்களிப்புகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதன்படி, கடந்த 2020-21-ம் நிதியாண்டில் மத்தியில் ஆளும் பாஜக ரூ.477.54 கோடிக்கு மேல் நன்கொடை பெற்றுள்ளது. ஆனால், எதிர்க்கட்சியான காங்கிரஸ் சுமார் ரூ.74.50 கோடி மட்டுமே நன்கொடையாகப் பெற்றுள்ளது. 2019-20-ல், ரூ.139 கோடி நன்கொடை பெற்ற காங்கிரஸ், தற்போது 46% ஆக குறைந்துள்ளது.

இதேபோல, மற்ற பதிவு பெற்ற கட்சிகளும் தங்களின் 20,000 – க்கு மேல் பெற்ற நன்கொடைகள் குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதன்படி, ஒட்டுமொத்தமாக 2020-21ல் கட்சிகளுக்கான நன்கொடை 41.5% ஆக குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.