தடியமங்கலம் கிராமத்தில், கிராம சபைக் கூட்டத்தில் மஞ்சப்பை
வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்
மாவட்ட ஆட்சியர்.
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே குண்டுகுளம் கிராமத்தில் தடியமங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் நாகஜோதி தலைமையில், கிராமச்சபைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசிரவிக்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் மதுசூதன் ரெட்டி ஆகியோர் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர், ஊராட்சியில் மேற்கொண்ட பணிகள் மற்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கும் விதமாக, மானாமதுரை எம்.எல்.ஏ தமிழரசி மற்றும் மாவட்ட ஆட்சியர் கிராம மக்களுக்கு மஞ்சப்பை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பின்னர், கிராம மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினர். இறுதியாக ‘நம்ம ஊர் சூப்பர் விழிப்புணர்வு வாகனத்தினை’ மாவட்ட ஆட்சியர் மற்றும் மானாமதுரை சட்டமன்ற உறுப்பினர் தமிழரசி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
கு.பாலமுருகன்







