“தவெக – திமுகவுக்கு இடையே தான் போட்டி” – செங்கோட்டையன் பேட்டி!

திரைப்படத்தில் நடிப்பவர்கள் அரசியலுக்கு வந்து வெற்றி பெற முடியும் என முதல்முறையாக எம்.ஜி.ஆர் நிகழ்த்தி காட்டினார் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, “திரைப்படத்தில் நடிப்பவர்கள் அரசியலுக்கு வர முடியும், வெற்றி பெற முடியும் என இந்தியாவில் முதல்முறையாக எம்.ஜி.ஆர், ஆந்திராவில் என்.டி.ராமாராவ் நிகழ்த்தி காட்டினார்கள். தவெக., திமுகவுக்கும் இடையே போட்டி. எடப்பாடி பழனிச்சாமி கூறுவது போல் அதிமுக நிலை அவ்வாறாக இல்லை. பாரத பிரதமர் வரும் போது பின்னால் அதிமுக தலைவர்கள் புகைப்படம் இல்லை.

யாரை நம்பி கட்சி நடத்துகிறார். இவர் முகத்துக்காக ஓட்டு போடும் அளவிற்கு செல்வாக்கு பெற்றவரா? இவர் எந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக வரலாறே இல்லை. சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி என எதிலும் வெல்லவில்லை. மக்கள் புதிய மாற்றத்தை விரும்புகின்றனர். அனைவரும் ஒருமனதாக விரும்புகின்றனர். அந்த புதிய மாற்றத்திற்கு ஆண்டுக்கு 500 கோடி வருவாய் தேவையில்லை. மக்களுக்காக பணியாற்ற களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.

எங்கள் சர்வே மூலம் நாங்கள் 40 சதவீதம் இருக்கிறோம். இதுவரை இல்லாத வார்த்தை ஏன் சொல்கிறார். தூத்துக்குடியில் 13 பேர் சுட்டு கொல்லபட்ட போது இவர் முதல்வராக இருந்த போது சென்று பார்த்தார்களா? தூத்துக்குடி போராட்டத்தின் போது ஒரு அமைச்சராவது போய் பார்த்தார்களா? பேச்சு வார்த்தை நடத்தினார்களா? அவர் எபப்டி? முதல்வரானார் என்பது அனைவருக்கும் தெரியும். கூட்டணி குறித்து தலைவர் தான் பேச வேண்டும். அவர் கட்சியில் உள்ளவரகள் போல் நங்கள் பேச முடியாது. தலைவர் என்ன சொல்கிறாரோ? அந்த பயணத்தை மேற்கொண்டு உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.