மேகதாது பிரச்சனை விரைவில் முற்றுக்கு வர உள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக பாஜக சார்பில் தஞ்சையில் உண்ணாவிரத போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த போராட்டத்தில், “மேகதாது பிரச்னை விரைவில் முடிவுக்கு வர உள்ளது.” என்றும் நாடாளுமன்றத்தில் மத்திய நீர்வள அமைச்சர் உரையை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இன்றைய கூட்டத்தில் கர்நாடக எம்பி மேகதாது அணை திட்ட அறிக்கை ஒப்புதல் குறித்த கேள்விக்கு, மத்திய நீர்வள அமைச்சர் “இந்த திட்ட அறிக்கைக்கு கடைமடை நிலை மாநிலங்கள் ஒப்புதல் இல்லாமல், காவிரி நீர் மேலாண்மை ஒப்புதல் இல்லாமல் மத்திய அரசு ஒப்புதல் கொடுக்க இயலாது” என்று தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மத்திய அமைச்சரின் பதிலை வரவேற்ற அண்ணாமலை, மேகதாது அணை பிரச்சனை முற்றுக்கு வர உள்ளது நல்லதே நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.