நாட்டிலேயே, முதல் முறையாக ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை, ஓசூர் அருகே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
நோயாளிகளின் வீடுகளுக்கே நேரடியாக சென்று தேவையான சிகிச்சை அளித்து, மருந்து மாத்திரைகளை வழங்குவதற்காக ‘மக்களை தேடி மருத்துவம்’ என்ற திட்டத்தை தொடங்க, தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்தில் இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களைத்தேடி மருத்துவம் திட்டதை தொடங்கி வைத்தார்.
பின்னர், செவிலியர் மற்றும் இயன்முறை சிகிச்சையாளர்களுக்கு புதிய வாகனங்களை வழங்கிய முதலமைச்சர், மலைவாழ் மக்களுக்காக 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையையும் தொடங்கி வைத்தார்.
மஞ்சள் காமாலை நோய்க்கான விரைவு பரிசோதனை திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த ஆண்டு இறுதிக்குள், தமிழ்நாடு முழுவதும் மக்களைத்தேடி மருத்துவம் திட்டம் விரிவுப்படுத்தப்படும் என்றார்.




