செங்கோட்டையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் 70 வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் உருவம் கொண்ட 70 கிலோ கேக் வெட்டி திமுகவினர் கொண்டாடினர்.
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் பேரூந்து நிலையம் அருகே கீழப்பாவூர் மேற்கு
ஒன்றியம் சார்பில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை
முன்னிட்டுப் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், 70 நபர்களுக்கு
தென்னங்கன்றுகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.
இதேபோல் செங்கோட்டையில் திமுகவினர் தாலுகா அலுவலகம் முன்பு தமிழக முதல்வர்
மு க ஸ்டாலின் பிறந்தநாளைக் கொண்டாடும் விதத்தில் அவர் உருவம் படைத்த 70 கிலோ
எடையுள்ள கேக் வெட்டிப் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. இதே போல் தமிழக முதல்வர்
கேட்டுக் கொண்டதற்கிணங்க தென்காசியில் நகர தி.மு.க சார்பில் நகர செயலாளரும்,
நகர்மன்றத் தலைவருமான சாதிர் தலைமையில் 6-வது வார்டு உட்பட்ட அங்கன்வாடி
மையத்தில் 3 கிலோ எடையுடைய கேக் வெட்டி அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளுக்கு
புத்தாடைகளும் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து தென்காசி அரசு மாவட்டத் தலைமை மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது இங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் திமுகவினர் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.
-ரெ.வீரம்மாதேவி
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்