”மணீஷ் சிசோடியா பாஜகவில் இன்று சேர்ந்தால் நாளையே விடுதலையாவார்” – அரவிந்த் கெஜ்ரிவால்

மணீஷ் சிசோடியா பாஜகவில் இன்று சேர்ந்தால் நாளையே விடுதலையாவார் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி…

மணீஷ் சிசோடியா பாஜகவில் இன்று சேர்ந்தால் நாளையே விடுதலையாவார் என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில், புதிய மதுபான கொள்கை முறைகேடுகள் தொடர்பான விசாரணையை சிபிஐ விசாரித்து வருகிறது. இதுதொடர்பாக டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை சிபிஐ கைது செய்தது. இதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாஜக அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, மணீஷ் சிசோடியா இன்று டெல்லி சிபிஐ போஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரியது. இந்நிலையில், அதை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 5 நாட்கள் மார்ச் 4ம் தேதி வரை சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் தனது துணை முதலமைச்சர் பதவியை மணீஷ் சிசோடியா ராஜினாமா செய்துள்ளார். மேலும் டெல்லி சிறையில் உள்ள சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயினும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இவர்களது பதவி விலகல் கடிதங்களை முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார்.

அண்மைச் செய்தி: “முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆசை இருந்தால் கண்டிப்பாக பிரதமர் வேட்பாளராக நிற்கலாம்” – குஷ்பு

இந்த விவகாரம் தொடர்பாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறுகையில், “மணீஷ் சிசோடியா பாஜகவில் இன்று இணைந்தால் நாளைக்குள் அவர் விடுதலையாகிவிடுவார். ஊழல் பிரச்சினை அல்ல. அமைச்சர்கள் செய்த நல்ல பணியை நிறுத்துவதே இதன் நோக்கம். பாஜக ஆம் ஆத்மியை நிறுத்த விரும்புகிறது. நாங்கள் பஞ்சாபை வென்றதிலிருந்து அவர்களால் எங்களை தாங்க முடியவில்லை. அவர்கள் எங்களை தடுக்க விரும்புவது நடக்காது என்று டெல்லி மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்” என்று கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.