முக்கியச் செய்திகள் தமிழகம் விளையாட்டு

சென்னை அணியின் கேப்டனாக தோனி நீடிக்க வேண்டும்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

இன்னும் பல தொடர்களுக்கு சென்னை அணியின் கேப்டனாக தோனி நீடிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் 14-ஆவது சீசன் தொடரில், கோப்பையை கைப்பற்றிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ஐபிஎஸ் தலைவர் பிரஜேஷ் பாட்டீல், சிஎஸ்கே அணியின் உரிமையாளர் ஸ்ரீநிவாசன், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், சிஎஸ்கே வீரர்கள் மற்றும் அணி நிர்வாகத்தினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி தொடங்கியதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, 7-ஆம் நம்பர் எண் பொறித்த கவுரவ வீரருக்கான டி சர்ட்-ஐ தோனி வழங்கினார். அதேபோல், சிஎஸ்கே வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
பின்னர் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விழாவில் தான் முதலமைச்சராக பங்கேற்க வில்லை என்றும் தோனியின் ரசிகனாக பங்கேற்றுள்ளதாவும் கூறினார். அதே நேரத்தில் நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் தனது நினைப்பு முழுவதும் மழை பாதிப்பு குறித்துதான் உள்ளது என்றார்.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியும், தனது குடும்பத்தினரும் கூட தோனியின் ரசிகர்கள் தான் என்றும் அவர் தெரிவித்தார். தோனி ஜார்கண்ட் மாநிலத்தில் பிறந்து இருந்தாலும் தமிழ்நாட்டின் செல்ல பிள்ளை என புகழாரம் சூட்டினார்.

நெருக்கடியான சூழ்நிலையில் கருணாநிதியும், தோனியும் கூலாக இருந்து நிலைமையை கையாளக்கூடியவர்கள் என தெரிவித்தார். தமிழர்கள் பச்சை தமிழர்கள் என்றால், தோனி மஞ்சள் தமிழன் எனப் பாராட்டிய அவர், நீங்கள் விளையாட்டு பணியை தொடருங்கள் என்றும் தான் அரசியல் பணியை தொடருகிறேன் என்றும் கூறினார். இன்னும் பல சீசன்களுக்கு சென்னை அணியின் கேப்டனாக தோனி நீடிக்க வேண்டும் என்று தனது ஆவலை வெளிப்படுத்தி பாராட்டு உரையை முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவு செய்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார்?- அகிலேஷ் யாதவ் பரிந்துரைக்கும் 3 பெயர்கள்

Web Editor

ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த தனியார் ஆலைக்கு சீல்

Gayathri Venkatesan

கோவேக்சின் தடுப்பூசிக்கு அமெரிக்கா அனுமதி மறுப்பு!

G SaravanaKumar