அனைத்துத்துறை செயலாளர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துத்துறை அரசு செயலாளர்களுடன் இன்று காலை 10 மணிக்கு விரிவான ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வரும்…

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்துத்துறை அரசு செயலாளர்களுடன் இன்று காலை 10 மணிக்கு விரிவான ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. வரும் செப்.15ம் தேதி அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார். அதில், ஒவ்வொரு துறை வாரியாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் நிலை எந்த அளவில் உள்ளது? செயல்படுத்தப்பட்டு வரக்கூடிய திட்டங்கள் எப்போது முடிவடையும் என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் துறை வாரியான திட்டப்பணிகள், வருங்காலத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் குறித்தும் விரிவான ஆய்வு நடத்த உள்ளார்.

வடகிழக்கு பருவ மழை அடுத்த மாதம் தொடங்க இருக்கும் நிலையில் அதற்குள் செய்து முடிக்க வேண்டிய பணிகள் குறித்தும் இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. குறிப்பாக சென்னையில் மழை காலங்களில் வெள்ளம் தேங்காமல் இருக்க எடுக்கப்பட்டிருக்கும் பணிகள் மற்றும் மழை நீர் வடிகால் பணிகள், கால்வாய் தூர் வாருதல் பணிகள் குறித்தும் இதில் ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கிறது. இந்த ஆலோசனையில் அதிகாரிகளுக்கு தேவையான அறிவுரைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.