உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமி இன்று பதவியேற்பு

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதியாக எம்.துரைசாமி இன்று பதவி ஏற்கவுள்ளார். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு 62 வயது நிறைவடைவதை அடுத்து, நேற்று மாலையுடன் அவர் ஓய்வுபெற்றார். இதையடுத்து நேற்று…

சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதியாக எம்.துரைசாமி இன்று பதவி ஏற்கவுள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரிக்கு 62 வயது நிறைவடைவதை அடுத்து, நேற்று மாலையுடன் அவர் ஓய்வுபெற்றார். இதையடுத்து நேற்று அவருக்கு பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு இதுவரை தலைமைநீதிபதி நியமனம் செய்யபடவில்லை. தலைமை நீதிபதி பதவியை கவனிக்க உயர்நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்க உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் பரிந்துரை செய்தனர். இந்த பரிந்துரையை ஏற்றுக்கொண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக எம்.துரைசாமியை நியமித்து ஜனாதிபதி கடந்த சில நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தார்.

அதன்படி இன்று காலை 10 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு நீதிபதியாக எம்.துரைசாமி பதவியேற்க உள்ளார்.  இவர் வருகிற செப்டம்பர் 21ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.