கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை ஆரூர்தாஸ்க்கு வழங்கினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழ்த் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு கருணாநிதி பெயரில் “கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி பலநூறு திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதிய புகழ்பெற்ற வசனகர்த்தா ஆரூர்தாஸ்க்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று நடைபெறும் கருணாநிதி பிறந்தநாள் விழாவில், ஆரூர்தாஸ்-க்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதும், பத்து லட்சம் ரூபாய் பரிசுத் தொகையும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று அவரது இல்லத்திற்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விருது மற்றும் பத்துலட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார். அவருடன் அமைச்சர் துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, எவ. வேலு, ஆ.ராசா ஆகியோர் உடனிருந்தனர்.
அண்மைச் செய்தி: ‘முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடனான அனுபவம் குறித்து பகிரும் ஓட்டுனர்’
கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது பெற்ற ஆரூர்தாஸ் நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேக பேட்டியளித்தார். அப்போது, முதலமைச்சர் நேரடியாக என் இல்லத்திற்கு வந்து தமிழக அரசின் கலைஞர் கலைத்துறை வித்தகர் விருது வழங்கியிருப்பது நான் செய்த பாக்கியம் எனவும், அந்தகாலத்தில் கதை வசனத்திற்கு முக்கியத்துவம் இருந்தது. ஆனால், இந்த காலத்தில் சண்டைக்காட்சிகளுக்கு தான் முக்கியத்துவம் இருக்கிறது என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








