முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடனான அனுபவம் குறித்து பகிரும் ஓட்டுனர்

தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் 32 ஆண்டுகாலம் ஓட்டுநராக பயணித்த அனுபங்களை அவர் மறைந்த பிறகும் நாள்தோறும் எண்ணி, அவர் நினைவுகளோடு நாட்களை கடக்கும் ஓட்டுநர் தியாகராஜன்…

தமிழ்நாட்டில் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கிய மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் 32 ஆண்டுகாலம் ஓட்டுநராக பயணித்த அனுபங்களை அவர் மறைந்த பிறகும் நாள்தோறும் எண்ணி, அவர் நினைவுகளோடு நாட்களை கடக்கும் ஓட்டுநர் தியாகராஜன் குறித்த செய்தி தொகுப்பு.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் ஓட்டுநராக பயணித்த காலத்தை நாள்தோறும் எண்ணி வயது முதிர்ந்த காலத்தை கடப்பதாக கூறும் அவரது ஓட்டுநர் தியாகராஜன். ஈரோடு மாவட்டம் பவானியை

சேர்ந்தவர். இவர், 1960-ஆம் ஆண்டு குமாரபாளையம் ஜேகேகே சுந்தரம் செட்டியார் மூலமாக கருணாநிதியிடம் ஓட்டுநராக அறிமுகமாகியுள்ளார். தொடர்ந்து 2 ஆண்டுகள் இடைவெளியில் கார் ஓட்டிய தியாகராஜன், பின்நாளில் “தியாகராஜன் காரை எடு” என்று சொல்லும் அளவிற்கு கருணாநிதியிடம் நெருக்கமாகியுள்ளார்.

இந்த அனுபவம் குறித்து தியாகராஜன் கூறுகையில், கருணாநிதியுடன் கார் ஓட்டுநராக வேலை செய்ததை தனது பாக்கியமாக பார்ப்பதாகவும், ‘கலைஞர் கருணாநிதி’ ஓய்வுகாலம் பார்க்காமல் உழைப்பதில் முன்னோடியாக செயல்பட்டவர் என தெரிவிக்கின்றார். தான் கலைஞர் கருணாநிதியுடன் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யும் வாய்ப்பை பெற்றது பெருமையாக உள்ளதாக கூறும் அவர், கலைஞர் என்ன நினைக்கிறார் என்பதை நான் தெரிந்து செய்வேன். அதேபோல நான் என்ன நினைகிறோன் என்பதை அவர் அறிந்து செய்வார் என நெகிழ்ச்சிப்பட கூறும் அவர், இன்றும் தன்னை அன்புடன் கோபாலபுர உறவுகள் அன்போடு அழைப்பதாக நெகிழச்சியுடன் தெரிவிக்கிறார்.

அண்மைச் செய்தி: ‘மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதனுக்கு கலைஞர் எழுதுகோல் விருதினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வழங்கி கவுரவிக்கவுள்ளார்’

மேலும், கலைஞர் கருணாநிதி அறிவாலயம் கட்டுவதற்கு இரவு பகலாக மேற்கொண்ட சிரம்மத்தை வேதனையுடன் கூறும் ஓட்டுநர் தியாகராஜன். அதனால் தான் இன்றளவும் அண்ணா அறிவலாயம் கம்பீரமாக உயர்ந்து என உருக்கமாக கூறுகிறார். மேலும், கலைஞரும் எம்ஜிஆரும் கட்சி ரீதியாக மாற்று கருத்துகளை கொண்டவராக இருந்தாலும் நேருக்கு நேர் ஒருவரை சந்தித்து கொள்ளும் போது உடல் நலம் குறித்து இருவரும் கேட்டு கொண்ட தருணத்தை நேரில் பார்த்து தான் பிரம்மிப்பு அடைந்தாக தெரிவிக்கிறார். அதேபோல, கலைஞர் கருணாநிதிக்கு கார் ஓட்டிய காலத்தில் 2 பிரதமர் மற்றும் குடியரசு தலைவர் உள்ளிட்ட பெரும் தலைவர்களுக்கு தனக்கு கார் ஓட்டும் வாய்ப்பு கிடைத்தது எனவும், அதற்கு தான்  கடவுளுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் அசைவத்தில் விரால் மீனையும், சைவத்தில் முருங்கை காயையும், இனிப்பில் சூடான குலோப்ஜாமுனையும் விரும்பி சாப்பிடுவார் என பட்டியில்லிட்டுகிறார்.

மேலும், தன்னை கலைஞரிடம் கொண்டு சேர்த்த ஜேகேகே சுந்தர செட்டியாருக்கும்  கலைஞர் கருணாநிதிக்கு அவப்பெயர் ஏற்படாத வகையில் கவனத்துடன் தனது ஓட்டுநர் பணியை மேற்கொண்டதாக மகிழ்ச்சியுடன் தியாகராஜன் கூறினார். இந்நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள ஓட்டுநர் தியாகராஜனுக்கு அரசு இறுதிக்கால வாழ்வாதாரத்தை முன்னெடுக்க முன் வர வேண்டும் என்பதே அப்பகுதி பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.