தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ளார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக இன்று டெல்லி சென்றுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். அதன்படி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து டெல்லி…

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக இன்று டெல்லி சென்றுள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒரு நாள் பயணமாக டெல்லி செல்ல திட்டமிட்டு இருந்தார். அதன்படி, சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திலிருந்து டெல்லி செல்லும் பயணிகள் விமானத்தில் அவர் புறப்பட்டுச் சென்றார். அவருடன் தனி செயலாளர் உதயசந்திரன், உதவியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் சென்றுள்ளனர். டெல்லி சென்ற முதலமைச்சரை அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், சேகர்பாபு, ஆவடி நாசர் உள்ளிட்ட அமைச்சர்கள் வழியனுப்பி வைத்தனர்.

அண்மைச் செய்தி: ‘’எங்கும் ஊழல், எதிலும் ஊழல், எப்போதும் ஊழல் என்ற கொள்கையில் திமுக உறுதியாக இருக்கும்’ -பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் ட்வீட்’

டெல்லியில் நாளை காலை 10:30 மணிக்குக் குடியரசு துணைத் தலைவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவிக்கும் அவர், காலை 11:30 மணிக்குக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து வாழ்த்து தெரிவிக்கிறார். இந்த சந்திப்பின்போது, நீட் விலக்கு மசோதா குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், மாலை 4:30 மணிக்குப் பிரதமர் பிரதமர் மோடியைச் சந்தித்து செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றி தெரிவிக்க இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு மசோதா, ஜிஎஸ்டி நிதி நிலுவைத் தொகை உள்ளிட்டவை குறித்தும் புதிய திட்டங்கள் குறித்தும் வலியுறுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து, இரவு 8.30 மணிக்கு அவர் சென்னை திரும்புகிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.