கிருஷ்ணகிரியில் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டத்தை தொடங்கிவைக்கிறார் முதலமைச்சர்

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திடவுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சாமனப்பள்ளியில் மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தையும்,…

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை, கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திடவுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அடுத்த சாமனப்பள்ளியில் மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தையும், ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைக்க உள்ளார். இதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் ஓசூர் விமான நிலையம் சென்றடைந்த அவருடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியனும் உடன் சென்றார்.

விமான நிலையத்தில் மாவட்ட ஆட்சி தலைவர் ஜெயசந்திரபானுரெட்டி, சட்டமன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், மதியழகன் உள்ளிட்டோர் முதலமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து காரில் புறப்பட்டு ஓசூர் சென்ற முதலமைச்சருக்கு, சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு நின்று வரவேற்பு அளித்தனர். முதலமைச்சர் வருகையையொட்டி, ஏ.டி.ஜி.பி. தாமரைகண்ணன், டி.ஐ.ஜி.மகேஸ்வரி தலைமையில் 400 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.