மீட்டுப் பணியை பார்வையிட சென்று சிக்கிக்கொண்ட அமைச்சர்; பத்திரமாக மீட்ட ராணுவம்

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட அமைச்சரும் வெள்ளத்தில் சிக்கியதால் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார்.  மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு…

வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட அமைச்சரும் வெள்ளத்தில் சிக்கியதால் ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டுள்ளார். 
மத்திய பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. இதனையடுத்து மாநில அரசு மீட்பு பணியில் முழுமையாக களமிறங்கியுள்ளது. டாட்டியா மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கியிருப்பவர்களை மீட்கும் பணியை பார்வையிட மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா சென்றபோது எதிர்பாராத விதமாக மீட்பு படையினரின் படகு மீது மரம் சாய்ந்ததில் படகின் என்ஜின் பழுதானது. இதனையடுத்து வெள்ள பகுதியில் அமைச்சரும் சிக்கிக்கொண்டார்.
இதனையடுத்து மீட்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அமைச்சர் இருந்த பகுதிக்கு ராணுவ ஹெலிகாப்டர் விரைந்தது. பின்னர் வெள்ளத்தில் சிக்கியிருந்த அமைச்சருடன் அனைவரையும் மீட்புக்குழுவினர் மீட்டுள்ளனர்.
அமைச்சர் மீட்கப்படும் காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வெள்ளம் காரணமாக டாட்டியா மாவட்டத்தில் 2 பாலங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 7 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.